Thursday, May 9, 2024

கோட் படத்துலயும் இவரே…ஸ்டார் படத்துலயும் இவரே… சர்ப்ரைஸ் வைத்திருக்கும் கவினின் ஸ்டார் படம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி நாளை ரிலீசாகிறது.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் ஹரிஷ் கல்யாணை வைத்து தான் ஸ்டார் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். அதற்காக போஸ்டர்கள் எல்லாம் வெளியாகின ஆனால், தோனி தயாரிப்பில் உருவான எல்ஜிஎம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு காரணமாக ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தை தவற விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரைலரில் கெட்ட வார்த்தை ஒன்று இடம் பெற்றிருந்தது. அந்த வார்த்தையை பலரும் ட்ரெண்ட் ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் எடிட் செய்து பதிவிட்ட நிலையில் கடைசியில் சென்சார் போர்டு அதனை மியூட் செய்து ஸ்டார் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதேசமயம் பிரபலமான விஜே சித்துவின் மொட்டை மாடி பார்ட்டி யூடியூப் வீடியோவில் லுங்கிக் கட்டிக் கொண்டு பங்கேற்ற கவின் படுஜாலியாக அட்டகாசம் செய்து ஆட்டம் போட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.மேலும், ஸ்டார் படத்தின் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஸ்டார் படத்தில் கவின், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிகராகவே கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக கோட் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்றும் கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கப் போகிறார் என அடுக்கடுக்காக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

- Advertisement -

Read more

Local News