Wednesday, April 10, 2024

நேற்று இந்த நேரம் – திரைவிமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுல்லா செல்லும் நாயகன் சாரிக் ஹாசனும் அவரது காதலி ஹரிதாவும் ஒரு கட்டத்தில் நண்பர்களுக்கு இடையே மோதிக் கொள்கின்றனர். நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார்.

இது பற்றி போலீஸ் நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்கிறது. இந்த நிலையில் புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார். மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள்.

இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா? அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பது மீதி படம்

படத்தின் தொடக்கமே விசாரணையில் ஆரம்பிக்கிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த நண்பர்கள் ஏழு பேரின் வாழ்க்கை பக்கங்களை சிறிது சிறிதாக விவரிக்கிறது. அதில் சுவாரஸ்யம் இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் திடுக்கிடும் சம்பவங்களும், திருப்பங்களும் எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சியும் சூப்பர் என்று சொல்ல வைக்கிறது.

குற்றம் செய்தோர் தரப்பின் நியாயத்தையும், குற்றம் செய்ய தூண்டியவரின் குணநலன்களை தர்க்க ரீதியாக அமைத்த விதம் அருமை. அதே நேரம் காணாமல் போன நண்பனை தேட எடுத்த முயற்சி , நண்பர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ளாமல் தங்கிய இடத்திலேயே வைத்தது ஆகியவற்றுக்கு தர்க்கங்களை உருவாக்காமல் போனது பெரும் குறையே.

வில்லத்தனம் கலந்த பாத்திரத்தில் நாயகன் ஷாரிக் ஹாசன். முரண்களை அழகாக தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா சிறப்பாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கு பெருமை சேர்க்கிறார்.

நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா, ரமேஷ் காவியா, திவாகர், குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த் எல்லோருமே புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு இயல்பாக நடித்து அந்த பாத்திரமாகவே தெரிகிறார்கள். புலனாய்வு அதிகாரி வேல்ராஜாக வரும் ஆனந்த் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஒரே சம்பவத்தை பல கோணங்களில் விவரித்து திரைக்கதையை வித்தியாசமாக கையாண்ட இயக்குனர் சாய் ரோஷன் கே ஆரின் எண்ணத்தை மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷால். எடிட்டர் கோவிந்துக்கு இந்தப் படம் சவாலான படம்தான். இசையமைப்பாளர் கெவின்.எம். பாடல்களில் தந்த ஈர்ப்பைப் பின்னணி இசையிலும் நன்றாக கொடுத்திருக்கலாம்.

வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு இந்தப் படத்தை கொடுக்க வேண்டும் என்று நல்ல கதையை அதற்கு தகுந்த பாத்திரங்களை உருவாக்கி அதற்கான நடிகர்களை தேர்வு செய்து வேலை வாங்கி படமாக்கிய இயக்குனர் சாய் ரோஷன் கே.ஆர். அதை கொண்டு சென்ற விதம் மூலம் கவனம் பெறுகிறார்.

நேற்று இந்த நேரம் – வித்தியாசமான நல்ல முயற்சி

- Advertisement -

Read more

Local News