Thursday, May 9, 2024

இந்தியன் 2 vs புஷ்பா 2 மோதலா? என்ன செய்வது என்று அறியாமல் முழிக்கும் லைக்கா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டம் தான் இவரின் இயக்கத்தில் கமலின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படமான இந்தியன் 2 ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என தேதியை மட்டும் தவிர்த்து அறிவித்துள்ளார்கள்.ஆனால் இந்தியன் 2 சில காரணங்களால் ஜூன் மாதம் கூட வெளிவருவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலின் இந்தியன் 2 கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகவுள்ளது.‌இந்த படத்தின் தமிழ் வெர்ஷன் இன்னும் முழுமையாக முடியவில்லை எனவும் அது முடிந்த பின்பு தான் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி லைக்கா நிதி நெருக்கடியில் தவிக்கும் நிலையில் ஒரு பாடல் காட்சியும் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளதென அடுத்தடுத்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளதால் இப்படம் ஜூன் மாதம் வெளி வருவமா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது இந்த படம் எப்படி பார்த்தாலும் ஆகஸ்ட் மாதம் தான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நிறைய உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி பார்த்தால் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டால் சுதந்திர தினம் அன்று தான் ரிலீஸ் செய்ய திட்டமிடுவார்கள் என்றும்‌ அப்படி அன்று ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஆகஸ்ட் 15 அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படமும் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பில் கிட்டத்தட்ட பல நூறு கோடிகள் பிசினஸ் நடந்துள்ளது.

இப்படி இந்தியன் 2 மற்றும் புஷ்பா 2 படங்கள் ஒரே நாளில் வெளியானால் நிச்சயமாக மிகப்பெரிய கடுமையான போட்டி நிலவும், வேறு மொழி ஹீரோவாக இருந்தாலும் தமிழ் படங்களுக்கு புஷ்பா 2 சவாலாக அமையும் என கூறப்படும் நிலையில் லைக்கா என்ற செய்வது என்று அறியாது சரியாக யோசனை செய்து தான் படத்தை ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News