Wednesday, April 10, 2024

ரஜினி படத்தின் பெயர் கழுகு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதில் தாதா பாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தில் தங்க விலங்கு போட்டுக் கொண்டு அதாவது இரு கைகளிலும் தங்க கடிகாரம் போட்டு இணைத்து கைதி போல ரஜினிகாந்த் காட்சி தரும் படம் வெளியானது. இப்போது அந்தப் படத்திற்கு ‘கழுகு’ என்று பெயர் வைக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரு படத்தின் பெயர் ‘கழுகு’ என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் படத்தில் இணைந்த அருண் விஜய்

‘நாயகன்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் – கமலஹாசன் இணையும் படம் ‘தக் லைப்’. த்ரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை கமலஹாசன், மணிரத்னம், உதயநிதி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கமலஹாசன் பிசியாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வரும் இயக்குநர் மணிரத்னம், இப்போது அந்தப் படத்தில் புதிதாக நடிகர் அருண் விஜய்யை சேர்ந்திருக்கிறார்.

விஜய்யின் அடுத்த பட இயக்குநர்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து விஜய் நடிக்கும் 69வது படத்தின் இயக்குநர் யார் என்று கேள்வி எழுந்தது. அந்தப் படத்திற்கு பிறகு விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால், அந்தப் படம் அவரது கடைசி படமாக உருவாக உள்ளது.

விஜய்யிடம் , கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜெ.பாலாஜி, வெற்றிமாறன், வினோத் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அதனால் அவர்களில் ஒருவர் படம் இயக்குவார் என்று செய்திகள் வெளியானது. இப்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது

அட்லி இயக்கும் படத்தில் நாயகியாக சமந்தா?

ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கிய இயக்குநர் அட்லி, அடுத்து அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஏப்ரல் எட்டாம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் அந்தப் படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

மகளின் காதலை ஏற்றுக் கொண்ட ஸ்ரீதேவியின் கணவர்?

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியா என்பவரை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே பயணம் செய்தார்கள். சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு இருவரும் சேர்ந்த வந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர், “ஷிகரின் பெற்றோரிடம் உரிய முறையில் பேசி அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News