Thursday, May 9, 2024

மணிரத்தினத்தை வெளியே போக சொன்னாரா இளையராஜா?‌ உலாவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி வேறோரு உலகத்திற்கு எடுத்து சென்றவர்.எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் அவர்கள் பயணம் செய்ய பாதை. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் ஒரு பேட்டியில் செய்யாறு பாலு இளையராஜா பற்றி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் உலாவுகிறது.

அன்னக்கிளி திரைப்பட பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா மிகப்பெரிய இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு திறமையுடன் பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படி அமையும் அது அவருக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு எனலாம்.

இந்நிலையில் மணிரத்னத்தை இளையராஜா மரியாதை இல்லாமல் நடத்தியதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.அவர் அளித்த பேட்டியில், ‘கவிதாலயா நிறுவனத்துக்காக மணிரத்னம் ஒரு படம் செய்வதாக இருந்தது. அதற்கு இளையராஜாதான் இசை. அவரிடம் கதை சொல்லிவிட்டு; ட்யூனை வாங்கி வருமாறு பாலசந்தர் அனுப்பினார். மணிரத்னமும் கதை சொல்வதற்காக சென்றிருந்தாராம்

அச்சமயத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா ஸ்டூடியோ இருந்த நிலையில் மணிரத்னம் நேராக ஸ்டூடியோ உள்ளே சென்றுள்ளார்.உடனே இளையராஜாவோ, உன்னை யார் உடனே உள்ளே விட்டது. வெளியே போய் அந்த மரத்தடியில் நில்லு நான் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டாராம். மணிரத்னமும் மரத்தடியில் காத்திருந்திருக்கிறார்.

இது பாலசந்தருக்கு தெரிந்துவிட அவர் கோபத்துடன் அங்கு வந்து மணிரத்னத்தை காரில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, இவர் வேண்டாம் வேறொரு இசையமைப்பாளர் பார்த்துக் கொள்ளலாம் என‌ சொல்லி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News