Tuesday, May 7, 2024

இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் கலக்க வரும் ஜி.வி பிரகாஷ்! #13TheMovie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து இசையமைப்பாளர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகத் திறமை கொண்டவர்.தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி கெத்து காட்டி வருகிறார்.

சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷ் -ன் ரிபெல், கள்வன் மற்றும் டியர் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும் அதோடு னால வரவேற்பையும் பெற்று தந்தது. தன்னுடைய இசையில் 100 படங்களையும் நடிப்பில் 25 படங்களையும் கடந்துள்ளார் ஜிவி பிரகாஷ். டார்லிங் படம் இவரது என்ட்ரி படமாக தமிழில் அமைந்த நிலையில், தற்போது 25வது படமாக கிங்ஸ்டன் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில் 13 படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இந்தப் படத்தில் அவருடன் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். கே. விவேக் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இன்றைய தினம் படத்தின் டப்பிங்கை பேசி ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.தற்போதுஇப்படத்திற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இதனிடையே, 13 படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அதன் கதைக்களம் புதிதாக இருப்பதாகவும் டார்லிங் படத்திற்குப் பிறகு தான் நடித்துள்ள ஹாரர் படம் இது, நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்றும் ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News