Monday, April 29, 2024

இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வைரமுத்து, தான் அந்தப் படத்திற்காக ஒரு எதிர்மறையான பாடலை எழுதியுள்ளதாகக் கூறினார்.

இசை முக்கியமா, பாடல் வரிகள் முக்கியமா என்பது தற்போது திரையுலகில் விவாதப்பொருளாகியுள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் ஒரு நல்ல பாடல் பிறக்கும் என்றும் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். பெயர் இல்லாமல் யாரை எப்படி அழைப்பது? வெறும் இசை மட்டுமே இருந்தால் அந்தப் பாடலை அடையாளப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

காலம் கடந்த பாடல்கள் இன்னும் நிலைத்திருப்பதற்கு இசை மட்டுமே காரணமா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை, எந்த இசையுமின்றி பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு போன்ற பல கவிஞர்களின் சிந்தனைக்கூறும் பாடல் வரிகள், காலத்தை கடந்து நிற்கின்றன என்று கூறினார்.

இசையும் கவிதையும் இணைந்தால் தான் பாடல் உருவாகும். இல்லை என்று கூறுவது அறியாமை என்று வைரமுத்து கூறியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்து யாரை நோக்கி கூறப்பட்டது எனவும் ஒருவேளை இவர் கருத்து பாடலுக்கு உரிமை கோரும் இளையராஜாவை தான் குறித்து வைத்து பேசுகிறாரோ என்று இணையத்தில் வினாவி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News