அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’… வெளியான 13 பாடல்கள் கொண்ட ஆல்பம்!

அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் நீண்ட திரைக்கு வர தயாராகியுள்ளது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார்.

படத்தின் இசைப் பணிகளை ஹேஷாம் அப்துல் வஹாப் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் முழு இசை ஆல்பத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மொத்தம் 13 பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆல்பம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது அதற்கான புதிய வெளியீட்டுத் தேதியையும் படக்குழு உறுதி செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading