பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்!

தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான சவுகார் ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 94 வயதான அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1950-களில் கதாநாயகியாக திரைத்துறையில் அறிமுகமான சவுகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர், 1950-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ‘சவுகார்’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். சுமார் 70 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சவுகார் ஜானகி, தமிழில் கடைசியாக சந்தானம் நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் அவரது 400-வது படமாக அமைந்தது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading