Advertisement

சீன் படத்தின் வெற்றி… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

‘சீன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தனது ரசிகர்களுடன் கொண்டாடியுள்ள நடிகர் சூர்யா, அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் இப்படம் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வீடியோவில் ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பற்றிப் பேசிய சூர்யா, படத்தின் வெற்றியால் படக்குழுவினரை விட ரசிகர்களே அதிக மகிழ்ச்சியடைந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ரசித்ததுடன், அதன் கதையை அலசி ஆராய்ந்து கொண்டாடிய ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், இந்த வெற்றியில் பங்காற்றிய திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள், நலம் விரும்பிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் என அனைவருக்கும் படக்குழு சார்பில் நன்றி கூறினார். இந்த ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்றியதற்கும், ‘சீன்’ படத்தைக் கொண்டாடியதற்கும் நன்றி தெரிவித்த அவர், அடுத்ததாக இன்னும் சிறப்பான படைப்புடன் ரசிகர்களைச் சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply