மலைப்பயணத்தின் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தயாரா புக்யால் மலையேற்றத்தின்போது எடுத்த புகைப்படங்களை நடிகை கயாடு லோஹர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 3,700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பகாரியா டாப் சிகரத்தை அவர் சென்றடைந்துள்ளார்.
பனியால் மூடப்பட்ட மலைகள், மலையேற்றப் பாதைகள், தங்கியிருந்த கூடாரம், இரவில் மூட்டப்பட்ட நெருப்பு எனப் பயணத்தின் பல்வேறு தருணங்களைப் படங்களாகப் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், “பல சிகரங்களை நோக்கிய எனது முதல் பயணம் இது. தயாரா புக்யால் பகாரியா டாப் 3,700 மீட்டர். இது வெறும் தொடக்கம்தான்; இன்னும் பல சிகரங்களை அடைய வேண்டியுள்ளது. எப்போதுமே நான் ஒரு மலைப் பெண். இனியும் அப்படித்தான் இருப்பேன். இதைவிட எனக்குப் பிடித்தமான இடம் வேறெதுவும் இல்லை” எனத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
