“அன்பின் வழியது உயிர்நிலை”… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது பிறந்தநாளுக்கு பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்த உலகநாயகன் திரு.கமல்ஹாசன் சார் அவர்களுக்கும், பெருமதிப்பிற்குரிய ஐயா திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், அன்பிற்கினிய அண்ணன் திரு.சீமான் அவர்களுக்கும், அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரைத்துறை, பத்திரிகை, தொலைக்காட்சி, பண்பலை, இனணய ஊடகங்களில் இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் மற்றும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் ஒரு முறை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் உடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. கமல்ஹாசன் சார் அவர்களின் தயாரிப்பில், மண் சார்ந்த கதைகளை சொல்லும் சிறந்த கலைஞன் சிவக்குமார் முருகேசன் அவர்களின் இயக்கத்தில், எனது கல்லூரி மூத்தவரும், 24 ஆண்டுகால நண்பருமான சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசையில் எனது அடுத்த படமான “சேயோன்” திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட படக்குழுவினருக்கும், அதற்கு பேராதரவு அளித்து என்னை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்ட உதவிகள் செய்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

“அன்பின் வழியது உயிர்நிலை”

என்றும் அன்புடன்

தா.சிவகார்த்திகேயன்  என தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading