‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் ‘டேர் டெவில்’ படத்தின் மூலம் இணைந்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தனது கணவர் அஜித்குமாருடன் காரில் பயணம் செய்தபோது எடுத்த வீடியோ ஒன்றை ஷாலினி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“Music, love & a long drive…” என்ற வாசகத்துடன் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஷாலினி, அதில் ஒரு அழகான தருணத்தையும் பதிவு செய்துள்ளார். பின்னணியில் காதல் பாடல் ஒலிக்க, ஷாலினி வீடியோ எடுக்கும்போது அஜித் “I LOVE YOU” எனக் கூறுகிறார். இந்த நெகிழ்ச்சியான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
