Advertisement

அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… முதல்வர் விஜய், ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இசையமைப்பாளர் அனிருத் – காவியா மாறன் திருமணம் கிரீஸில் கடந்த 11-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், மணமக்களுக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் முதல்வர் விஜய் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் வருகை தந்த நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply