நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தனது அழகின் ரகசியம் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார். அவர் கூறிய கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.
இந்திய திரையுலகில் பிசியாக நடிகைகளில் இருக்கும் நடிகை ராஷ்மிகா, சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது திரைப்பணிகளில் தொடர்ந்து பிஸியாக இருந்து வருவதுடன், புதிய திரைப்படம் ஒன்றிலும் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, உள்ளம் அழகாக இருந்தால் மேனியும் அழகாகத் தெரியும். எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், நமது ஆழ்மனம் தூய்மையாக இருந்தால்தான் உண்மையான அழகு வெளிப்படும். வாழ்க்கை இருக்கும் வரை நல்ல செயல்களை செய்து வாழ வேண்டும். நாம் செய்யும் நற்செயல்கள், நம்முடைய காலத்திற்குப் பிறகும் நம்மை நினைவுகூரச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
