டிரெண்டிங்-ல் ‘ஜெயிலர் 2’ முதல் பாடலான ‘அல்ல போலலோ’ !

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகி 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓய்வுபெற்ற சிறைக்காவல் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்த இந்தப் படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் மீண்டும் இணைந்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. அக்டோபர் 15-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும், அனிருத் இசையமைத்திருப்பதும் படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இதற்கிடையே ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘அல்ல போலலோ’ இன்று, ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலில் நடிகை பூர்ணா மற்றும் மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் ஆகியோர் சிறப்பு நடனம் ஆடியுள்ளனர். முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் பிற மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களின் சிறப்புத் தோற்றங்கள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading