Advertisement

பூஜையுடன் தொடங்கிய கவின் – சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின், தற்போது ‘ஹாய்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ‘தண்டட்டி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் சங்கயா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பால சரவணன் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

படக்குழு இந்த திரைப்படத்திற்கு ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே தற்போது நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply