அஜய் தேவ்கன் ராணுவ அதிகாரியாக நடிக்கும் ‘சவுஹான்’ !

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் தற்போது திரிஷ்யம் 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, சவுஹான் என்ற புதிய திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அஜய் தேவ்கனின் தந்தையும், புகழ்பெற்ற சண்டைப் பயிற்சிக் கலைஞருமான வீர் தேவ்கனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தை இயக்குநர் நீரஜ் யாதவ் இயக்குகிறார். காஷ்மீரின் புல்வாமா பகுதியை பின்னணியாகக் கொண்டு அரசியல் மற்றும் ஆக்ஷன் திரில்லர் பாணியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். படத்தின் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட டீசரில் இடம்பெற்றுள்ள, “பதான்களிடம் சொல்லுங்கள்… சவுஹான் வந்து கொண்டிருக்கிறான்” என்ற வசனம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading