நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியில் உருவாகும் ‘விஜயம்’… வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர், நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள டியர் ஸ்டூடன்ட்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரதிச்சாயா, பேபி கேர்ள் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் பல புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், நிவின் பாலியின் 50-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தப் படத்திற்கு மாத்திற்க விஜயம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம், பிரேமம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மற்றும் நடிகர் நிவின் பாலி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ரசிகர்களின் மனதில் அழியாத இடம்பிடித்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒன்றாக இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைய தனது நல்வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading