நடிகர் தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ஓம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் ஹிந்தியில் உருவான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தது.
அதேசமயம், காதல் காட்சிகளும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இதன் காரணமாக உலகளவில் சுமார் ரூ.160 கோடி வசூலித்து, கடந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் – ஆனந்த் எல்.ராய் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனக் தகவல்கள் உலாவருகின்றன. பீரியட் பின்னணியில் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதையாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
