பிரபல இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ், 73 வயதில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அவரது மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், முன்னதாக வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, டி.ஆர். பாலு, ஆ.ராசா ஆகியோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழியும் தனியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சீமான், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வி.கே. சசிகலா, பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே. வாசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யாவுடன் நேரில் வந்து பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திரையுலகைச் சேர்ந்த ராதிகா, சரத்குமார், மணிரத்னம், பிரபு, விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், ஹெச். வினோத், தனுஷ் ,மன்சூர் அலிகான், பி. வாசு, ஆர். சுந்தர்ராஜன், அர்ஜுன், பார்த்திபன், சுஹாசினி, இசையமைப்பாளர் தேவா, சந்தான பாரதி, சித்ரா லட்சுமணன், பாண்டியராஜன், எஸ்.ஏ. சந்திரசேகர், சார்லி, சின்னி ஜெயந்த், சினேகன், லோகேஷ் கனகராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், ஸ்ரீபிரியா, கவுண்டமணி, செந்தில், காஜா ஷெரீப், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்குமரன், இயக்குநர்கள் சங்கம் சார்பில் பேரரசு, சசி, ஏ.ஆர். முருகதாஸ், ஆர்.கே. சுரேஷ், ஜீவா, ராமராஜன், சுசீந்திரன், ஜெயராம், சி.ஆர். சரஸ்வதி, வையாபுரி, பரத், கலையரசன், நாசர், பூச்சி முருகன், புகழ், சுகன்யா, சேரன், மலையாள நடிகர் திலீப், இயக்குநர் பாலா, யார் கண்ணன், ஷகிலா, எஸ்.வி. சேகர், ஸ்ரீகாந்த், ராதாரவி, விமல், தியாகராஜன், பிரசாந்த், சினேகா, தனுஷ், நளினி, ஸ்ரீகாந்த் தேவா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
