பிரபல இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ், 73 வயதில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவரது குருநாதரான இயக்குநர் பாரதிராஜா மறைந்த நிலையில், தற்போது அவரது சிஷியரான பாக்யராஜும் மறைந்தது திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாக்யராஜின் உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தான் வாழ்ந்த நாட்களிலேயே தனது கண்களை தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார் பாக்யராஜ். இந்நிலையில், மருத்துவக் குழுவினர் அவரது இல்லத்திற்கு வந்து கண்தான நடைமுறைகளை மேற்கொண்டு, அவரது கண்களைப் பெற்றுச் சென்றனர். மறைந்த பின்னரும் தனது கண்கள் மூலம் மற்றொருவரின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றிச் செல்லும் உயர்ந்த மனிதநேயச் செயலை பாக்யராஜ் நிறைவேற்றியுள்ளார்.
