ஆர்யாவின் 40-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ படத்தை நிகில் முரளி இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகியோர் தி ஷோ பீப்பிள் நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மேலும், சில்வர் கிரெயின் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரிப்பில் இணைந்துள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘மஜா மஜா’ என்ற மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நீரஜ் மாதவ், விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை நீரஜ் மாதவ் மற்றும் செம்வி இணைந்து பாடியுள்ளனர். ‘ஹலோ காதல்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
