‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர் அமிதாப்பச்சன் மட்டும் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்து வருகிறார்கள். இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் டிரிப்டி டிம்ரி மற்றும் நடிகர் விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். அதிரடி மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் ரொமான்டிக் காட்சிகள் ஏற்கனவே முதற்கட்டமாக படமாக்கப்பட்ட நிலையில், தற்போது பிரபாஸ் மற்றும் விவேக் ஓபராய் இடையேயான முக்கிய ஆக்ஷன் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள கொம்பல்லி பகுதியில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன. ‘ஸ்பிரிட்’ திரைப்படம் 2027ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், ‘கல்கி 2’ திரைப்படம் 2027 டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர, ‘பவுசி’ என்ற மற்றொரு படத்திலும் பிரபாஸ் தற்போது நடித்து வருகிறார்.
