தமிழ் நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக லண்டனில் நடைபெறும் பிரபலமான லீ மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் தனது அணியுடன் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு நேரில் சென்ற முதல்வர் விஜய்க்கு அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து போட்டிக்காக அங்கு தயாராக இருந்த நடிகர் அஜித்தை பார்த்ததும் முதல்வர் விஜய் அவரை நோக்கி ஓடிச்சென்று அன்பாக கட்டியணைத்து கொண்டார். பின்னர் ஒன்றாக இணைந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கை அசைத்தனர். இந்த சந்திப்பு அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அஜித்திடம் பேசிய முதல்வர் விஜய், லீ மான்ஸ் கார் பந்தயத்தில் அவர் வெற்றி பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் போட்டியை கொடியசைத்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மேலும், அஜித்தின் கார் அருகில் அமர்ந்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இருவரும் சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டில் சந்தித்துக் கொண்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
