ராம் சரணின் ‘பெத்தி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் ராம் சரண், கடைசியாக இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும், ராம் சரண் தொடர்ந்து பல முக்கிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், நடிகை ஜான்வி கபூர் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் ராம் சரணின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading