ஆன்மீக உணர்வுகளை ‘கிருஷ்ணாவதாரம்’ புதிய தலைமுறைக்கு புதுமையான முறையில் அறிமுகப்படுத்தும் – தயாரிப்பாளர் சஜன் ராஜ் குருப்!

கடந்த மே 7ம் தேதி வெளியான ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய சினிமாவையும் செவ்வியல் கலை மரபையும் இணைக்கும் முயற்சியாக, ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான கிரியேட்டிவ்லேண்ட் ஸ்டுடியோஸ், முன்னணி கலைக்கூடங்களுடன் இணைந்து, திரைப்படத்தின் 150 முக்கிய காட்சிகளை வரையறுக்கப்பட்ட பதிப்பு லித்தோகிராஃப் அச்சுப்படங்களாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த பிரத்யேக முயற்சி, ராஜா ரவி வர்மாவின் காலத்தால் அழியாத கலைப் பாரம்பரியத்திலிருந்து ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சியில், இந்த அச்சுப்படங்களின் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலை, கலாச்சாரம், ஆன்மீகம், அரசு நிர்வாகம் மற்றும் பெருநிறுவன துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சஜன் ராஜ் குருப் கூறுகையில், “கிருஷ்ணாவதாரத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தருணத்தை மட்டும் பதிவு செய்வது அல்ல, அதனுடன் இணைந்த உணர்வுகளையும் காட்சிகளின் வழியாக நிலைநிறுத்துவதே எங்களின் நோக்கமாகும். இந்த முயற்சி, அந்த காட்சிகளை திரையைத் தாண்டி நிரந்தரமான கலாச்சார வடிவமாக மாற்ற உதவுகிறது. ராஜா ரவி வர்மா தனது கல் அச்சுப் படங்கள் மூலம் தெய்வீகத்தை மக்களின் இல்லங்களுக்குள் கொண்டு வந்தது போல, நாங்களும் அந்த மரபை புதிய தலைமுறைக்கு புதுமையான முறையில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading