ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் நடிக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். அந்த திரைப்படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெரிய வரவேற்பை உருவாக்கிக் கொண்டார். ‘டிராகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். நடிகை கயாடு லோஹர் முதன்முதலில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘முகில்பெட்’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை மாரியப்பா 2 சின்னா இயக்கியுள்ளார். மர்மத் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் அருண்குமார் தனசேகரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் ஜி.வி. பிரகாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த திரைப்படத்தில் டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ மற்றும் சுனிதா ஸ்ரேஸ்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading