சிவராஜ் குமார் நடிக்கும் ‘பெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீடு!

பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமார், 1974ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீனிவாச கல்யாணம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அவர், இதுவரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிவராஜ்குமார், தமிழ் ரசிகர்களிடையே ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மூலம் அதிக கவனம் பெற்றார். தற்போது அவர் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இயக்குநர் பவன் வடேயார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெயில்’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை கேவின் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சனா ஆனந்த், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, ஜெயராம், சாய் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகிற வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ‘பெயில்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading