‘ட்ரோன்ஸ்’ படத்தின் முதல் பாடல் ‘அஸ்கு மச்சா’ வெளியீடு!

இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான பேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. ஹாரர், பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் ஆகிய மூன்று ஜானர்களின் அம்சங்களையும் இணைத்து உருவாகும் இப்படத்தின் திரைக்கதையில் மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி என பல மர்மமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

‘ட்ரோன்ஸ்’ படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஆர்ஜே தீபக் இந்தப் படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமாகிறார்.ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ள தற்போது ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அஸ்கு மச்சா’ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ஆதவன் எழுதி பாடியுள்ள இந்தப் பாடல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடம் நல்ல கவனத்தை பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading