‘கல்கி 2’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பிரபாஸ்!

கடந்த 2024 ஆம் ஆண்டு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ் உடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, சோபனா, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு, அதில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு நடித்தார். இந்த நிலையில், இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து கமல்ஹாசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அடுத்தடுத்து இந்த படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முதல் பாகத்தில் நடித்த தீபிகா படுகோனே, இந்த இரண்டாம் பாகத்தில் இருந்து விலகுவதாக முன்பே அறிவித்துள்ளார். அவர் நடித்த சுமதி கதாபாத்திரத்தில் தற்போது யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்து படக்குழு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading