பிரபலமான ஹாலிவுட் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கும் கிறிஸ்டோபர் நோலன், தனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படமாக ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை வழங்கியுள்ளார். இந்தப் படத்தில் ஓப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி சிறப்பாக நடித்திருந்தார். உலகளவில் பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படம் மொத்தம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து, கிறிஸ்டோபர் நோலன் தற்போது தனது 13வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘தி ஒடிஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் மேட் டாமன் மற்றும் ‘ஸ்பைடர் மேன்’ புகழ் டாம் ஹாலண்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
பழமையான கவிஞர் ஹோமர் எழுதிய காவியக் கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் வருகிற ஜூலை 17ஆம் தேதி வெளியாக உள்ளது. முழுமையாக ஐமேக்ஸ் கேமராக்களில் படமாக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் ஐமேக்ஸ் வெளியீட்டை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், ‘தி ஒடிஸி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.
—
