தமிழக அரசியலில் யாராலும் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படாத ஒரு பெரிய மாற்றம் சமீபத்திய தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது. சில சமயங்களில் நாம் முன்பே யூகித்து கூறும் விஷயங்கள் பின்னர் நிஜமாகும் போது, அது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு சம்பவமே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வைரலாகி வருகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நாயகனாக நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தின் தலைப்பே தற்போது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொருந்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த திரைப்படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் பதிவு எண்ணாக ‘டிஎன் 07 சிஎம் 2026’ என அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதையே தவெக ஆதரவாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அன்றே இதை கணித்தார் இயக்குநர் வெங்கட் பிரபு என அவரை பாராட்டியும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.
—
