இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் திரிஷா இணைந்து நடித்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த திரைப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல் தெய்வமான கருப்புசாமியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். வருகிற 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழு தற்போது தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் 13 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மட்டுமே இப்படத்தை திரையரங்குகளில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
—
