‘D55’ படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்போது தனது 55வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராஜகுமார பெரியசாமி இயக்கி வருகிறார். மேலும், இப்படத்தை தனுஷ் தானே தயாரித்து வருவதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ளனர். இதில் மம்மூட்டி ஒரு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இப்படத்தில் தனுஷ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் எனவும் கூறப்படுகிறது. த்ரில்லர் வகை கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading