தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் சமீபத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த படத்திற்கு பிந்தைய நிலையில், அடுத்த படத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார், ‘மிர்சாபூர்’ மூலம் புகழ்பெற்ற திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்காக, ராம் சரணுடன் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடனமாடியுள்ளார்.
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாக இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
