அட்லி – அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ ரிலீஸ் எப்போது?

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தற்போது மும்பையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அல்லு அர்ஜுன் ஒரே படத்தில் மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்ற உள்ளதாக கூறப்படுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே ‘ராக்கா’ படத்தின் வெளியீட்டை எப்போது வைத்துக் கொள்வது என்பது குறித்தும் படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பாக, 2027-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வந்து, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மிகப்பெரிய வெளியீடாக அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இதுவரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 2027 டிசம்பர் மாதத்தை இலக்காக வைத்தே படத்தின் அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading