அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்மன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு..!

ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக உருவாகி வருகிறது ‘தர்மன்’. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகிளது.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவராக நடித்து வருகிறார். அவருடன் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்களிடம் தெரிவிக்கும் விதமாக படப்பிடிப்பு தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading