மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்!

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக் மெயில்’ போன்ற தொடர்ச்சியான திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் மு. மாறன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பிளாக் மெயில்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மு. மாறன், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘அப்பா குட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை முழுக்க திரில்லர் கதைகளில் கவனம் செலுத்திய அவர், இந்த முறை முதல் முறையாக அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்ட முழுநீள உணர்ச்சி (சென்டிமெண்ட்) கதையை உருவாக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ மற்றும் கவின் நடித்த ‘கிஸ்’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். இந்த புதிய முயற்சி மூலம் மாறன் தனது இயக்கத்தில் புதிய பரிமாணத்தை காட்டவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading