‘டி56’ படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் தொடக்கம்… அப்டேட் கொடுத்த தமிழரசன் பச்சமுத்து!

தனுஷின் அடுத்த படமான ‘டி56’-ஐ ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளார். இந்தப் படத்தைச் சுற்றி தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வந்துள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரீத்தி முகுந்தனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், ‘உறியடி’ விஜயகுமார் வில்லனாக நடிக்கலாம் என்றும், அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த தமிழரசன் பச்சமுத்து, “உங்களுக்காக ஒரு பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் படத்தை இயக்குவேன் என்று நம்புகிறேன், விரும்புகிறேன் மற்றும் உறுதியளிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் D.” என்று பதிவிட்டுள்ளார். அதனுடன் “ஆடிக்கு அப்புறம் பூச ஆரம்பம்” என்றும் குறிப்பிட்டு, ‘டி56’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading