தேர்தலின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது – இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வகையில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குரிமையை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றே இறுதி முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே யாராலும் கணிக்க முடியாது என்று ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில விளம்பரங்களில் நடிக்க பல கோடி ரூபாய் வழங்கப்பட்டாலும், நான் அவற்றில் நடிக்க மறுத்துள்ளேன். இந்த தேர்தலின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. நாம் எதிர்பார்த்தது நடைபெறுமா இல்லையா என்பது மே 4-ம் தேதி தான் தெளிவாகத் தெரியும்” என்று குறிப்பிட்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading