‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 150 நாட்களுக்கு மேல் கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு இப்போது நிறைவு பெற்றுள்ளது. ரஜினிகாந்த் உடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பதால், வணிக ரீதியாகவும் இந்த படம் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்து கருத்து தெரிவித்த யோகி பாபு, “ஜெயிலர் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘ஜெயிலர் 2’ அதைவிட பெரிய மெகா ஹிட் ஆகும். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
முதல் பாகமான ஜெயிலர் படத்தில் கார் ஓட்டுநராக நடித்த யோகி பாபு அவர்களின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இரண்டாம் பாகத்திலும் ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு இணைந்து வரும் காட்சிகள் இடம்பெற உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
—
