மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த ‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். இதனுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பல தடவைகள் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டிருந்த நிலையில், இறுதியாக இந்த திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில், இப்படத்திலிருந்து வெளியான “காட் மோட்”, “நாங்க நாலு பேரு”, “ராத்து ராசன்” போன்ற பாடல்கள் தொடர்ச்சியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த சூழலில், ‘கருப்பு’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற 26ஆம் தேதி மதுரை நகரில் அமைந்துள்ள சோலைமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். முன்னதாக, இப்படம் கருப்புசாமி அம்சத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், அதன் சார்பாகவே மதுரையில் இசைவெளியீட்டு விழா நடத்தப்படுகின்றது என்ற தகவலும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading