தெலுங்கு திரில்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்ற ‘பாலிமேரா’ திரைப்படம் 2021-ஆம் ஆண்டு வெளியானது. அதன் வெற்றியை தொடர்ந்து 2023-ல் வந்த இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இயக்குநர் அனில் விஸ்வநாத், இந்த தொடரின் மூன்றாவது பாகத்தையும் தொடங்கியுள்ளார்.
இந்த புதிய பாகத்தில் நடிகர் அர்ஜூன் இணைந்திருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அவர் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், கதையின் சஸ்பென்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவரது வேடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்யம் ராஜேஷ் மீண்டும் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், கிராமப்புற பின்னணி, பிளாக் மேஜிக் அம்சங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் முக்கிய இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய இரண்டு பாகங்களின் வெற்றிக்கும் இதே அம்சங்களே காரணமாக இருந்தன.இந்த முறை மூன்றாம் பாகம் எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. ‘பாலிமேரா 3’ படத்தின் தொடக்க பூஜை ஜூலை 27-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
