விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படங்களில் ஒன்றாக ஸ்லம்டாக் ; 33 டெம்பிள் ரோடு திரைப்படம் உள்ளது. இந்த படத்தை தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகிகளாக தபு மற்றும் சம்யுக்தா நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் இணைந்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய விஜய் சேதுபதி, இந்த திரைப்படத்தில் வழக்கமான காதல் காட்சிகள் இடம்பெறாது தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், கதைக்கும் அதிரடி காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து இப்படம் உருவானதாக கூறப்படுகிறது. அந்த வகையில், வித்தியாசமான கதை சொல்லும் முறையுடன் இந்த படம் உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
