நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘மேடி’… வெளியான புதிய பட அறிவிப்பு!

நடிகர் ரியோ ராஜ், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது போன்ற படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்துள்ளார். தற்போது அவர் ராம் இன் லீலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இதனுடன், “River Root Studios” என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி திரைப்படத் தயாரிப்பிலும் கால் பதித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய ஏழாவது திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

‘மேடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, மீசைய முறுக்கு, நட்பே துணை, மாஸ்டர், வாரிசு, லியோ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திகேயன் இயக்குகிறார். இப்படத்தில் ரியோ ராஜ்க்கு ஜோடியாக சானியா அய்யப்பன் நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் சிங்கம் புலி மற்றும் ஆர்ஜே விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading