Advertisement

அனிருத் வெளியிட்ட ‘ரேணிகுண்டா 2’ படத்தின் இரண்டாவது பாடல்!

2010ம் ஆண்டு வெளியான ‘ரேணிகுண்டா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘ரேணிகுண்டா 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பன்னீர்செல்வமே இரண்டாம் பாகத்தையும் இயக்கி, தயாரித்துள்ளார். ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷமி திலகன், நிஷாந்த், கனிஃபா, தமிழ்செல்வம், சுந்தீப், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் தீப்ஷிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்க, ராஜசேகர் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். யுகபாரதி மற்றும் விவேகா பாடல்களை எழுதியுள்ளனர். கடந்த ஜூலை 4ம் தேதி படத்தின் டீசர் வெளியான நிலையில், விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு தயாராகி வருகிறது.

இதனிடையே ‘ரேணிகுண்டா 2’ படத்தின் இரண்டாவது பாடலான ‘மச்சகல்லி’ தற்போது வெளியாகியுள்ளது. குருஅய்யாதுரை மற்றும் கவிதா கோபி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply