நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடைபெறாத நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலும் படத்தின் புரமோஷனுக்காகவும் ரஜினிகாந்த் படக்குழுவினருடன் இணைந்து நீண்ட நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த சிறப்பு நேர்காணல், வரும் அக்டோபர் 11-ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Add a Comment
