ரியோ ராஜூக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சானியா ஐயப்பன்! #Maddy

2023ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ‘ஜோ’ திரைப்படம் வெளியாகி, விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, அந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்த ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘ராம் இன் லீலா’ என்ற புதிய திரைப்படத்தில் ரியோ ராஜ் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்கும் மற்றொரு புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

‘மேடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திகேயன் இயக்குகிறார். இப்படத்தில் ரியோ ராஜுக்கு இணையாக சானியா ஐயப்பன் கதாநாயகியாக நடிக்கிறார். விக்ரம் பிரபு நடித்த ‘இறுகப்பற்று’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை சானியா ஐயப்பன், தற்போது இந்த புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading