நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காட்டான்’ தொடர் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. அதேபோல் அவர் நடித்துள்ள ‘ட்ரெயின்’ திரைப்படம் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது. கோடை விடுமுறை காலத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் புதுமையான கதை சொல்லும் முறையில் அமைந்துள்ளது. இதேவேளை, ‘Slumdog’ என்ற திரைப்படம் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் தயாராகி உள்ளது. ஆந்திரா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற இந்த படம் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி அம்சங்களுடன் உருவாகியுள்ளது.
மேலும், ‘சீதக்காதி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மற்றொரு திரைப்படமும் அமைதியாக முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘ஜெயிலர் 2’ படத்தில் குறுகிய நேரம் தோன்றினாலும் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் படத்திலும் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் சிம்பு நடித்த ‘அரசன்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்கான கதை விவாதங்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். ‘மகாராஜா 2’ திரைப்படத்திற்கான திரைக்கதை இயக்குநர் நித்திலன் மூலம் தயாராகி, விஜய் சேதுபதி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இயக்குநர் மகிழ்திருமேனி கூறிய கதையும் தயாரிப்பிற்கு செல்லும் நிலையில் உள்ளது. இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக செயல்பட்டு வருகிறார் விஜய் சேதுபதி.
